இதுதான் அன்புமணியின் 'டகால்டி' வேலை: 'சந்தானம் பட போஸ்டர் குறித்து வன்னி அரசு

வெள்ளி, 7 ஜூன் 2019 (22:10 IST)
நடிகர்கள் சிகரெட் புகைப்பது போன்ற காட்சிகளோ, ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரோ வந்தால் அதனை எதிர்த்து முதலில் குரல் கொடுக்கும் நபராக அன்புமணி இருந்து வருகிறார். ரஜினியின் 'பாபா' படம் ரிலீஸ் ஆனபோது படப்பெட்டியையே தூக்கி கொண்ட போன கட்சி அன்புமணியின் 'பாமக' கட்சி. அதேபோல் விஜய்யின் சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் அவர் புகைப்பிடிப்பது போன்று இருந்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் அன்புமணி
 
ஆனால் நேற்று முன் தினம் சந்தானம் நடித்த 'டகால்டி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் அவர் புகைபிடிப்பது போன்று உள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு அன்புமணி உள்பட பாமகவினர் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதனை சுட்டிக்காட்டிய வன்னி அரசு 'இதுதான் அன்புமணியின் டகால்டி வேலை' என்று வறுத்தெடுக்கும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
 
புகையிலை எதிர்ப்பு கொள்கை என்றால் யாவருக்கும் பொதுவானதாகத்தான் இருக்க முடியும். ஆனால், அன்புமணியின் அணுகுமுறை விருப்பு, வெறுப்பு, உறவு, பகை அடிப்படையில் அமைந்துள்ளது.
 
நாடக அரசியலை போல புகையிலை அரசியலும் மக்களிடம் இனி எடுபடாது. அன்புமணியின் இந்த ‘டகால்டி’ வேலையும் ‘பிசினஸ்’தானோ? என்று வன்னி அரசு கேள்வி எழுப்பியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்