போர்க்களம்: சயிரா நரசிம்மா ரெட்டி டிரைலர் 2 ரிலீஸ்!

Webdunia
வியாழன், 26 செப்டம்பர் 2019 (11:38 IST)
மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் சயிரா நரசிம்மா ரெட்டி படத்தின் இரண்டாவது டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. 
 
மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள சரித்திர திரைப்படம் 'சயிரா நரசிம்மா ரெட்டி'. இந்த படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
 
சிரஞ்சீவியுடன் நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா, அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, ஜெகபதிபாபு, கிச்சா சுதீப் உட்பட பல இந்திய பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். இந்த படத்தை சிரஞ்சீவியின் மகனும் பிரபல நடிகருமான ராம் சரண் தேஜா தயாரித்துள்ளார்.
 
இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் போர் காட்சி ஒன்று பலகோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் இந்த போர்க்காட்சி தான் படத்தின் ஹைலைட் என்றும் கூறப்பட்டது. 
 
தற்போது இந்த போர்க்காட்சியின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. சுதந்திர போராட்டத்தின் வெறியை திரையில் கொண்டு வரும் வகையில் சண்டை காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதொ இந்த டிரைலர்... 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்