தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால் தற்போது கணவருடன் தனியாக வசித்து வருகிறார். குக்வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார். கொரோனா நேரத்தில் கிராமம் ஒன்றில் மாட்டிக்கொண்ட மணிமேகலை அங்கிருந்தபடியே முறுக்கு சுடுவது, சிறுவர்களுடன் விளையாடுவது என நிறைய வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் தற்ப்போது செம காமெடியாக ஒர்க் அவுட் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். டயரை நகர்த்த முடியாமல் நகர்த்தி அங்கிருந்த மற்றொரு டையரின் குழிக்குள் விழுந்துவிட்டார். இந்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு நமக்கு வராத விஷயத்தையெல்லாம் ட்ரை பண்ணக்கூடாது என நகைச்சுவையாக கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார்.