ஊர் ஊரா போய் ஷோ பண்ணிட்டு இருந்த மணிமேகலையின் நிலைமைய பாருங்களேன்..!

Webdunia
திங்கள், 30 மார்ச் 2020 (08:43 IST)
தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுததால் மக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர். இதற்கிடையில் தமிழகம் முழுவதும் வரும் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.  இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் தற்போது மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிராமத்து குழந்தைகளுடன் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ரொம்ப சிம்பிளா... ஒரு டிராக் பேண்ட் டீ ஷர்ட் அணிந்துகொண்டு நம் பக்கத்துவீட்டு பெண் போலவே சாதாரணமாக இருக்கும் மணிமேகலையின் குணத்தை பலரும் ரசித்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Epadiyo chinna pasangala yemathiyachu

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்