தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டன், சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்தது தற்போது கொரோனா வைரஸின் ஊரடங்கு உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சஷி ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு பதிலளித்த அவர் "உங்களை போலவே நானும் அப்டேட்டிற்கு காத்திருக்கிறேன்' இந்த உலகம் இப்போது எங்கள் படத்தின் தலைப்பு # ஜாகமேதந்திரம் போல இருக்கிறது. எனவே வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள், உங்கள் குடும்பத்தினரையும் உங்களையும் கவனித்துக் கொள்ளுங்கள் முக்கியமாக, #chillbroவை மறக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.