இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்ட அஞ்சனா - விழிப்புணர்வு பதிவு!

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (12:49 IST)
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் 'கயல்' படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.
 
திறமையான ஆங்கராக ஹீரோயின் லுக்கில் இருக்கும் அஞ்சனாவுக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தும். அதையெல்லாம் வேண்டாமென உதறிவிட்டு தொடர்ந்து புதுயுகம்,  ஜீ தமிழ்,கலர்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.
 
இந்நிலையில் கொரோனா இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்ட அஞ்சனா அதன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, " தடுப்பூசியின் இரண்டாவது டோஸுடன் முடிந்தது! தயவுசெய்து நீங்கள் சரியான நேரத்தில் டோஸ் எடுப்பதை உறுதிசெய்து, அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள்! இதை எதிர்த்துப் போராடலாம். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் நேரில் சந்திக்க முடியும் என்று நம்புகிறோம், விரைவில் அரவணைப்புடன்! என கூறி விழிப்புணர்வு செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்