துப்பாக்கி படத்திற்கு இணையாக விவேகம்: ஒரு கல்லூரி மாணவியின் விமர்சனம்

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2017 (22:20 IST)
தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தை பல விமர்சகர்கள் பணம் வாங்கி கொண்டு கழுவி கழுவி ஊற்றியதாக கூறப்பட்டு வரும் நிலையில் முதல்முறையாக கல்லூரி மாணவ, மாணவிகள் டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் வீடியோ விமர்சனம் செய்து வருகின்றனர்



 
 
துப்பாக்கி படத்தில் ஸ்லீப்பர் செல் என்ற புதிய கான்செப்டை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கொடுத்தது போல 'விவேகம்' படத்தில் இயக்குனர் சிவா, ஹாலோகிராம், சீக்ரைட் சொசைட்டி, மார்ஸ் கோட் ஆகியவற்றை நமக்கு சொல்லி கொடுத்துள்ளார். இதுவரை எந்த தமிழ்ப்படத்திலும் இந்த கான்செப்ட்டுக்கள் வந்ததில்லை. எனவே படத்தை புரிந்து பார்த்தால் கண்டிப்பாக இது நல்ல படம் என்று உணர்வீர்கள். புரியவில்லை என்றால் இன்னொரு முறைகூட பார்க்கலாம் தவறில்லை' என்று கல்லூரி மாணவி ஒருவர் டுவிட்டரில் வீடியோ மூலம் விமர்சனம் செய்துள்ளார்.
 
'விவேகம்' படத்திற்கு அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி தற்போது கல்லூரி மாணவ, மாணவிகளும் களத்தில் இறங்கி புரமோஷன் செய்து வருவதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது ஒரு நல்ல படம் பெய்டு விமர்சகர்களால் தோல்வி என்ற நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகவே களமிறங்கியுள்ளதாக கல்லூரி மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்