ரிலீஸ் ஆனவுடனே இணையத்தில் வெளியாகும் விஸ்வாசம்..!

Webdunia
சனி, 5 ஜனவரி 2019 (12:48 IST)
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் வரும் 10ம் தேதி வெளியாகவுள்ளது. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் 4 ஆவது முறையாக இணைந்து தல அஜித் இப்படத்தில் நடித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். 



 
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான  இப்படத்தின் டிரைலர்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது . 
 
2018ல்  அஜித் நடிப்பில் எந்த படமும் வெளியாகாததால், இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் காத்திருக்கின்றனர் . 


 
பொங்கலை முன்னிட்டு விஸ்வாசமும், பேட்ட படமும்  திரைக்கு வருவதால்,  ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்கு முன்னதாக  10ம் தேதியே அஜீத்தின் ‘விஸ்வாசம்’ ரிலீஸ் ஆகவுள்ளது . அதுமட்டுமின்றி அஜித் ரசிகர்களுக்கு ஒரு இன்பச்செய்தி என்னவென்றால்,  படத்துக்கு முதல் நாளன்று நள்ளிரவு 1 மணி காட்சிக்கே அனுமதி பெற்றிருப்பதாக செய்திகள் உலா வருகின்றன. 
 
இருந்தாலும் தற்போது அஜித் ரசிகர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது , விஸ்வாசம் படம் வெளியான சில வாரங்களிலேயே பிரபல ஷாப்பிங் நிறுவனமான அமேசான் ப்ரைம் வீடியோவில் விஸ்வாசம் திரைப்படத்தை வெளியிட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 
பொதுவாக அமேசான் பிரைம் ஆப்-பில் திரைப்படங்கள் வெளியாகி சில காலங்கள் கழித்து தான் அமேசானில் வெளியிடுவார்கள் ஆனால், விஸ்வாசம் வெளியான ஒரு சில வாரங்களிலேயே அமேசானில் வெளியாகுவதால் இப்படத்தின் வசூல் முற்றிலும் பாதிப்படைய நிறைய வாய்ப்பும் இருக்கிறது. 
 
இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்