சத்யம் தியேட்டரில் மாஸ் காட்டும் விஸ்வாசம் !

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2018 (09:48 IST)
சென்னை சத்யம் தியேட்டரில் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் போஸ்டர் இப்போதே பிரமாண்டமாக வைக்கப்பட்டுள்ளது. 


 
நடிகர் அஜித் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர், ரமேஷ் திலக் என பலர் இணைந்து நடித்துள்ளார்.
 
இப்படம் பொங்கலுக்கு உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. அதற்காக தல ரசிகர்களும் தற்போதில் இருந்தே கொண்டாட தொடங்கி விட்டனர். இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல தியேட்டரான சத்யம் தியேட்டர் முன்பும் விஸ்வாசம் பேனர்கள் வைக்கபட்டுள்ளன. அந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
 இந்த போஸ்டர் தியேட்டரின் பின் பக்கத்தில் வெரிதாக வைக்கப்பட்டுள்ளது என்றும் முன் பக்கத்தில் பேட்ட பேனர் தான் வைக்கப்படும் என்றும் ரஜினி ரசிகர் கூறி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்