இதுதான் 'தல' பில்லா ஓபனிங் சீனை இப்ப பார்த்தாலும் சும்ம அதிரும் !

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2018 (09:18 IST)
தமிழ் சினிமாவில் வெளியான ரீமேக் படங்களில் மிகப்பெரிய அளவில் மெகாஹிட்டான படம் என்றால்,  அது பில்லா தான். தோல்விகளால் துவண்டுகிடந்த அஜித்துக்கு பில்லா படம் மிகப்பெரிய பிரேக் கொடுத்தது என்றால் மிகையல்ல.


 
இன்றளவும் ரஜினி படத்தை  ரீமேக் செய்து வெற்றி பெற்ற ஒரே நடிகர் அஜித் மட்டுமே. பில்லா படம் வெளியாகி இன்றுடன் 11 வருடங்கள் ஆகிவிட்டது.  2007ம் ஆண்டு இதே நாளில் தான் அஜித், நயன்தாரா, நமிதா நடிப்பில் பில்லா படம் வெளியானது. விஷ்ணு வர்தன் இயக்கி இருந்தார்.
 
வில்லன் அல்லது டான் என்பவர் அதுவரை பார்க்க முரடன் போல், பயங்கரமாக காட்டுவார்கள். ஆனால் பில்லா படத்தில் மிக ஸ்டைலிஸாக  அஜித்தை காட்டியிருப்பார்கள். இந்த படத்தில் அற்புதமாக மிக அழகாக அஜித் காணப்படுவார்.  டேவிட் பில்லா என்ற கேரக்டரில் நடிக்கும் அஜித் ஒரு கட்டத்தில் கொல்லப்படுகிறார். அதை மறைக்கும் போலீஸ் அதிகாரி பிரபு. வேலு என்கிற அஜித்தாக நடிக்க வைத்து, திருட்டு கும்பலை பிடிக்க முயற்சி செய்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் பிரபு இறந்தவிடுகிறார். ஆனால் அஜித்தை போலீஸ்காரர்கள் பில்லா என்று கூறி துரத்துகிறார்கள். அதேநேரம் காட்டிக்கொடுத்ததுக்காக திருட்டு கும்பல் அஜித்தை துரத்துகிறது. இறுதியில் போலீசில் உயர்அதிகாரி வேடத்தில் இருக்கும் ரகுமான் தான்  சூத்திரகாரர் என்பதை அஜித் கண்டுபிடிக்கிறார். இறுதியில் தான் பில்லா இல்லை என்பதை நிரூபித்து சுதந்திரமாக வருகிறார். இதுதான் படத்தின் கதை. 
 
டேவிட் பில்லாவாக ஒரு காட்சியில் வரும் அஜித், போலீசிடம் இருந்து தப்பிக்கும் காட்சி இன்றும் தமிழ் சினிமாவில் ஸ்டைலாக அற்புதமாக வடிவமைக்கப்பட்ட காட்சியாக பார்க்கப்படுகிறது. இதேபோல் மைநேம் இஸ் பில்லா பாடலும் மிகச்சிறப்பாக காட்சி படுத்தப்பட்டிருக்கும். இந்த படத்தில் யுவன்சங்கர் ராஜாவின் பின்னணி இசை இன்னும் பல வருங்களுக்கு பேசப்படும். நிச்சல் உடையில் நயன்தாராவின் சாகசங்கள், நமீதாவின் கவர்ச்சி நடனங்கள் பில்லா படத்தில் மிரட்டலாக இருக்கும். மொத்தத்தில் அஜித்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையை பில்லா படம் கொடுத்தது. மாஸ் ஹீரோவான அஜித் தன்னை மீண்டும் இப்படம் மூலம் புதுப்பித்துக்கொண்டார்.  
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்