தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக 2000 ஆம் ஆண்டு முதல் இருந்து வருபவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் கௌதம் மேனன், ஜீவா, கே வி ஆனந்த் மற்றும் ஷங்கர் ஆகிய இயக்குனர்களுடன் இணைந்து கொடுத்த ஹிட் பாடல்கள் எண்ணிலடங்காதவை. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்பு திடீரென குறைய ஆரம்பித்தது. இதே போல அவரது பாடல்கள் பெரும்பாலும் காப்பி அடிக்கப்பட்டவை என்ற குற்றச்சாட்டும், அவரின் சம்பளம் அதிகம் என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஏ எல் விஜய் தயாரிப்பில் உருவாகும் காதல் ரீசெட் ரிப்பீட் என்ற படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கான ப்ரோமோவில் ஹாரிஸ் ஜெயராஜைக் கடத்திக்கொண்டு சென்று பாடலைக் கேட்பது போல படக்குழு ஜாலியான ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. இந்த படம் ஹாரிஸுக்குக் கம்பேக் படமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.