கமல் பிறந்தநாளில் வெளியாகும் ரஜினி பட அப்டேட்!

vinoth

புதன், 29 அக்டோபர் 2025 (07:46 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே ரஜினிகாந்தின் படங்கள் அதீத வன்முறைக் காட்சிகள் கொண்டதாகவே உருவாகி வருகின்றன. ஆனால் ரஜினிக்கு மிகப்பெரிய அளவில் பெண்கள் மற்றும் குழந்தை ரசிகர்கள் உள்ளனர். அதனால் அவர்களைக் கவரும் வகையில் ஒரு ஜாலியான படத்தில் நடிக்கவேண்டும் என அவர் ஆசைப்படுகிறாராம்.

இதனால் கமல்ஹாசனுடன் இணைந்து அவர் நடிக்கவுள்ள படத்துக்கு படத்துக்கு முன்பாக ரஜினி சுந்தர் சி இயக்கத்தில் ஒரு குறுகிய கால படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஆக்‌ஷன் படமாக இல்லாமல் கலகலப்பான ஒரு சுந்தர் சி ஸ்டைலிலான படமாக அமையும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தைக் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாகவும் இணைத் தயாரிப்பாளராக சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் பணியாற்றவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கமல்ஹாசன் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதி இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஷூட்டிங் தொடங்கி தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்