ராயன் படத்தில் இதனால்தான் நடிக்கவில்லை… விஷ்ணு விஷால் சொன்ன தகவல்!

vinoth

வெள்ளி, 24 அக்டோபர் 2025 (15:24 IST)
நடிகர் தனுஷ் நடித்து, இயக்கிய அவரின் 50 ஆவது படமான ராயன் ஜூலை 26 ஆம் தேதி வெளியான நிலையில் நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. படத்தில் தனுஷோடு சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடித்திருந்தனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தார்.

படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் கலக்கியது. தனுஷின் 50 ஆவது படம் என்ற பிராண்டாடோடு வெளியான இந்த படத்தை ரசிகர்கள் லாஜிக் எல்லாம் பார்க்காமல் கொண்டாடினர். படத்தில் தனுஷின் சகோதரர்களாக சந்தீப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்திருந்தனர்.

இதில் சந்தீப் கிஷன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் விஷ்ணு விஷால்தான் நடிப்பதாக இருந்ததாம். ஏன் நடிக்கவில்லை என்று தற்போது விஷ்ணு விஷால் பேசியுள்ளார். அதில் “எனக்காக அந்த கதாபாத்திரத்தை திருத்தி எழுதவும் தனுஷ் சார் பெருந்தன்மையாக ஒத்துக் கொண்டார். ஆனால் என்னால் அப்போது தேதிகள் ஒதுக்க முடியவில்லை. அதனால் என்னால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்