அந்த படத்தை நான் மிஸ் செய்துவிட்டேன்… விஷ்ணுவிஷால் ஆதங்க ட்வீட்!

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (08:23 IST)
கார்த்தி நடிப்பில் சுசீந்தரன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு ரிலீஸான திரைப்படம் நான் மகான் அல்ல. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று கார்த்திக்கு தெலுங்கிலும் மார்க்கெட்டை திறந்து விட்டது. இந்த படம் ரிலீஸ் ஆகி இப்போது 13 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ரசிகர்கள் பலரும் அந்த படத்தைப் புகழ்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுபற்றிய பதிவு ஒன்றை பகிர்ந்த நடிகர் விஷ்ணு விஷால் டிவிட்டரில் “நான் மகான் அல்ல எனக்கு மிகவும் பிடித்த படம். இந்த படம்தான் என் இரண்டாவது படமாக வந்திருக்க வேண்டும். எல்லாம் இறுதியாகிவிட்டது. ஆனால் விதி வேறு விதமாக திட்டம் வைத்திருந்துள்ளது.

நான் பலமுறை நினைத்துப் பார்ப்பதுண்டு. இந்த படம் என் இரண்டாவது படமாக இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று.” எனக் கூறியுள்ளார். விஷ்ணு விஷால் அறிமுகமான வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்