கொடைக்கானலில் தொடங்கியது விஷ்ணு விஷால்- ராம்குமார் படம்!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (08:31 IST)
விஷ்ணு விஷால் மற்றும் ராம்குமார் இயக்கத்தில் உருவான முண்டாசுப்பட்டி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பின்னர் அவர்கள் கூட்டணியில் உருவான ராட்சசன் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து நான்கு ஆண்டு இடைவெளிகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. இது ஒரு காதல் பேண்டஸி திரைப்படம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் 20 நாட்கள் கொடைக்கானலில் தொடங்கி நடந்து முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் மொத்தக் கதைக்களனும் கொடைக்கானலில் நடக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க அதிதி ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் மொத்தமே ஆறு கதாபாத்திரங்கள் மட்டுமே இடம்பெறும் எனவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்