முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை மற்றும் ராட்சசன் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் நடிகர் விஷ்ணு விஷால். தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு மார்க்கெட்டை உருவாக்கியுள்ள அவர் இப்போது ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
ஆனால் தற்போது விஷ்ணு விஷால் எந்தக் காரணமும் இல்லாமல் சினிமாவில் ஒரு பின்னடைவை சந்தித்துள்ளார். அவர் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக எந்த படமும் ரிலீஸாகவில்லை. அவர் நடிப்பில் முண்டாசுபட்டி இயக்குனர் ராம்குமார் இயக்கும் இரண்டு உலகங்கள் என்ற படம் அவருக்கு மீண்டும் ஒரு வெற்றியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.