விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ குவியும் பாசிட்டிவ் விமர்சனங்கள்!

வெள்ளி, 2 டிசம்பர் 2022 (13:10 IST)
நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ‘கட்டா குஸ்தி என்ற திரைப்படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு சமூக வலைதளங்களில் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. 
 
விஷ்ணுவிஷால் ரவிதேஜா ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலரது நடிப்பில் உருவான திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. செல்லா அய்யாவு இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைத்துள்ளார் 
 
இந்த படம் முழுக்க முழுக்க காமெடி அம்சமாக ஜாலியாக இருப்பதாகவும் ஒரு மிகச் சிறந்த குடும்ப எண்டர்டெயின்மெண்ட் படம் என்றும் படம் பார்த்தவர்கள் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
 
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் இன்று அதிகாலை காட்சியைப் பார்த்தவர்கள் தங்கள் டுவிட்டரில் பாசிட்டிவ் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது \
 
இதனை அடுத்து விஷ்ணு விஷாலுக்கு இந்த படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு சூப்பர்ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ள நிலையில் தெலுங்கிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்