இதையடுத்து சமீபத்தில் இந்த நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. அது முதற்கொண்டு அதிகளவில் படங்களைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10 முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களை வைத்து படங்களைத் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன.
இதில் தனுஷை வைத்து அடுத்தடுத்து மூன்று படங்களைத் தயாரிக்கவுள்ளது. அதில் முதல்படமாக தனுஷ்- விக்னேஷ் ராஜா கூட்டணியில் தனுஷ் 54 ஆவது படம் உருவாகி வருகிறது. அடுத்து தனுஷ்- மாரி செல்வராஜ், தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் என படங்கள் வரிசையில் உள்ளன. இந்த மூன்று படங்களுக்கும் சேர்த்து மட்டும் 500 கோடி ரூபாயை ஐசரி கணேஷ் முதலீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.