இந்நிலையில் இந்த படத்தின் சிலக் காட்சிகளை- ஆண்ட்ரியா சம்மந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் வெற்றிமாறனே இயக்கியுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. படம் ஆரம்பித்ததில் இருந்தே இயக்குனருக்கும் கவினுக்கும் இடையே மோதல், கவினுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் இடையே மோதல் என்றெல்லாம் செய்திகள் பரவி வந்த நிலையில் தற்போது இப்படி ஒரு தகவல் பரவி வருகிறது. இதை உறுதிபடுத்துவது போல படத்தின் போஸ்டர்களிலும் வாத்தியாராக வெற்றிமாறன் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.