காஷ்மீர் ஃபைல்ஸ் வெறுப்புணர்வை தூண்டும் படம்? – இஸ்ரேல் இயக்குனர் விமர்சனம்!

செவ்வாய், 29 நவம்பர் 2022 (08:14 IST)
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ குறித்து இஸ்ரேலிய இயக்குனர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அனுபம் கெர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இந்த ஆண்டில் வெளியான படம் ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’. காஷ்மீர் பண்டிட்கள் படுகொலை சம்பவத்தை மையப்படுத்தி வெளியான இந்த படம் அப்போதே பெரும் சர்ச்சைகளை சந்தித்தது.

எனினும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் இந்த படத்தை பாராட்டிய நிலையில் தேசிய விருதும் அளிக்கப்பட்டது. தற்போது கோவாவில் நடந்து வந்த சர்வதேச திரைப்பட விழா நேற்று முடிந்தது. அதன் நிறைவு விழாவில் பேசிய ஜூரி குழுவின் தலைவரும், இஸ்ரேலிய இயக்குனருமான நடாவ் லபிட் “காஷ்மீர் ஃபைல்ஸ் வெறுப்புணர்வை தூண்டும் ஒரு படம். இந்த படத்தை பார்த்து நாங்கள் அதிர்ச்சிக்கு உள்ளானோம். இந்த மாதிரியான முக்கியத்துவம் வாய்ந்த விழாவில் திரையிடப்படும் படம் அல்ல இது” என்று தெரிவித்திருந்தார்.

அவரது கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பலரும் மல்லுக்கட்ட தொடங்கியுள்ள நிலையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்