திமுகவின் ஊதுகுழலாக ஓபிஎஸ் செயல்படுகிறார்- ஜெயக்குமார் விமர்சனம்

வெள்ளி, 25 நவம்பர் 2022 (17:14 IST)
திமுகவின் ஊதுகுழலாக ஓபிஎஸ் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் எனப் பிரிந்திருந்த நிலையில் சசிகலா, தினகரனை கட்சியைவிட்டு நீக்கியபின், இருவரும் இணைந்து பணியாற்றி வந்தனர்.
 

ALSO READ: விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம்- ஓ.பன்னீர்செல்வம் தகவல்
 
இரு தரப்பினர்க்கும் இடையே கருத்து வேறுபாடுகளும் மோதல் போக்குகளும் அதிகரித்து வந்த நிலையில், தற்போது அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி மூன்று அணிகளாக உள்ளது.

இந்த நிலையில், மூன்று தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர்.

இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த  அதிமுக எதிக்கட்சித் தலைவர், எடப்பாடி அணியைச் சேர்ந்த  ஜெயக்குமார், கட்சி விரோத  நடவடிக்கைகளில் ஈடுபட்டால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? அதிமுக அலுவலகத்தை ரவுடிகளுடன் வந்து, இடித்து, புத்தகங்களை எடுத்துச் சென்றால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? அவரது மகனும் கலைஞரின் வசனங்களுக்கு ரசிகர்கள் என்றும் கூறிவருவதை எப்படி ஏற்க முடியும்? திமுகவின் ஒட்டுமொத்த ஊதுகுழலாக அவர் இருக்கும் நிலையில், பொதுக்குழுவால் எப்படி சேர்க்க முடியும்! பொதுகுழுதான் அவர்களை நீக்கியது. பாஜகவின் அமித்ஷா, மோடி ஆகியோர் உட்கட்சி விவகாரத்தில் தலையிடவில்லை எனத் தெரிவித்துள்ளது.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்