இயக்குனருக்கு செட்டில்மெண்ட்… மகுடம் பட பிரச்சனையைத் தீர்த்த விஷால் & கோ!

vinoth

சனி, 1 நவம்பர் 2025 (11:27 IST)
சில மாதங்களுக்கு முன்னர் விஷால் நடிப்பில் ரவி அரசு இயக்கத்தில் உருவாகும் ‘மகுடம்’ படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் திடீரென இந்த படத்தில் இருந்து இயக்குனர் ரவி அரசு நீக்கப்பட்டு அவருக்குப் பதில் விஷாலே படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இது சம்மந்தமான தெளிவான விளக்கம் எதுவும் விஷால் தரப்பில் இருந்து வெளியாகவில்லை. இயக்குனரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஷால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.  இந்நிலையில் தன் தரப்பு விளக்கத்தை சொல்ல இயக்குனர் ரவி அரசு விஷால் இல்லத்துக்கு சென்றதாகவும், ஆனால் பலமணி நேரம் ஆகியும் விஷால் அவரை சந்திக்கவே இல்லை என்றும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் முறையான விளக்கம் அளிக்காமல் இயக்குனரை நீக்கியதால் கோபமடைந்த இயக்குனர் சங்கம் திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பான FEFSI மூலமாக இந்த படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் உடனடியாக இயக்குனர் ரவி அரசுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் மற்றும் கதையுரிமைத் தொகையைக் கொடுத்துவிட்டு ஷூட்டிங்கை தொடங்கிவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்