வாடிவாசலுக்குப் பிறகு தனுஷுடன் படம்… உறுதி செய்த வெற்றிமாறன்!

vinoth

புதன், 21 மே 2025 (10:27 IST)
தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலானக் கதாநாயகர்கள் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசையை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர். விடுதலை இரண்டு பாகங்களையும் இயக்கிய வெற்றிமாறன் தற்போது  சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ படத்தை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலோடு காத்திருக்கும் படங்களில் ஒன்று சூர்யா மற்றும் வெற்றிமாறன் இணையும் ‘வாடிவாசல்’ திரைப்படம். ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டும் வெற்றிமாறன் மற்றும் சூர்யா ஆகியோரின் அடுத்தடுத்த பட வேலைகளால் இந்த படம் தாமதமாகிக் கொண்டே வந்தது. இந்த ஆண்டுக்குள் எப்படியும் ஷூட்டிங் தொடங்கிவிடும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு பிறகு வெற்றிமாறன் அடுத்து தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளாராம். இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதை வெற்றிமாறனே ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்