பயணிகள் படகுடன் மோதிய கடற்படை அதிவேக படகு! 13 பேர் மூழ்கி பலி! - மும்பையில் அதிர்ச்சி சம்பவம்!

Prasanth Karthick

வியாழன், 19 டிசம்பர் 2024 (09:48 IST)

மும்பை கடற்பகுதியில் சுற்றுலா பயணிகள் சென்ற படகில் கடற்படையின் படகு மோதிய சம்பவத்தில் 13 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

மும்பையில் உள்ள கேட் ஆஃப் இந்தியா பகுதியிலிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு நீல்கமல் என்ற படகு, எலிபெண்டா தீவை நோக்கி மாலை வேளையில் சென்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது அவ்வழியாக இந்திய கடற்படையின் படகு அதிவேகமாக வந்து பயணிகள் படகுடன் மோதியது.

 

இதில் சேதமடைந்த பயணிகள் படகு கடலில் கவிழ்ந்த நிலையில் அதில் இருந்த பயணிகள் உயிருக்கு போராடி வந்தனர். உடனடியாக அங்கு விரைந்த மீட்புப்படை 99 பேரை உயிருடன் காப்பாற்றினர். ஆனால் 13 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு கடற்படையின் அதிவேக படகே காரணம் என நீல்கமல் சுற்றுலா படகின் உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

இந்த விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவியாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்