மகுடம் படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

vinoth

செவ்வாய், 21 அக்டோபர் 2025 (08:24 IST)
கடந்த சில ஆண்டுகளாக பல சறுக்கல்களை சந்தித்த விஷால் ‘மத கஜ ராஜா’ படத்தின் வெற்றியின் மூலம் கம்பேக் கொடுத்தார். ஆனால் சமீபகாலமாக அவர் சில உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சைப் பெற்று குணமானார்.

சில மாதங்களுக்கு முன்னர் அவர் ரவி அரசு இயக்கத்தில் ‘மகுடம்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகிக் கவனம் ஈர்த்தது. போஸ்டரில் விஷால் மூன்று விதமான கெட்டப்களில் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். படத்துக்கு மகுடம் என்று டைட்டில் வைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே இந்த படத்தின் இயக்குனர் ரவி அரசுக்கும் விஷாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்து ரவி அரசு படத்தில் இருந்து விலகியதாகவும், அதனால் விஷாலே படத்தை இயக்கும் பொறுப்பை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் பரவின. அதை இப்போது விஷால் உறுதிபடுத்தியுள்ளார். நேற்று தீபாவளி அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘மகுடம்’ படத்தின் இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளேன் என அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்