மகுடம் இயக்குநர் விலகல்? மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் விஷால்? - பரபரப்பு தகவல்!

Prasanth K

புதன், 15 அக்டோபர் 2025 (15:36 IST)

விஷால் நடித்து வெளியாக உள்ள மகுடம் படத்தின் இயக்குநர் வெளியேறியதால் படத்தை விஷாலே இயக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

தமிழில் ஈட்டி, ஐங்கரன் உள்ளிட்ட படங்களை இயக்கி நல்ல கமர்ஷியல் அறிமுக இயக்குநராக இருப்பவர் ரவி அரசு. இவர் இயக்கத்தில் விஷால் நடிக்கும் மகுடம் படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் விஷால் 3 கெட்டப்புகளில் நடிக்கும் நிலையில் துஷாரா விஜயன், அஞ்சலி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

 

இந்நிலையில் படப்பிடிப்பின்போது இயக்குநருக்கும், விஷாலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் இயக்குநர் ரவி அரசு படத்தை விட்டு விலகி விட்டதாகவும், அதனால் விஷாலே படத்தை இயக்குவதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.

 

தற்போது மகுடம் படப்பிடிப்பு தளத்தில் விஷாலே இயக்கும் காட்சிகள் வெளியாகி அதை உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே விஷால் - மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் - 2ல் இப்படி பிரச்சினை ஏற்பட மிஷ்கின் விலகியதால் விஷாலே இயக்குநர் அவதாரம் எடுத்தார். ஆனால் அந்த படம் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்