விஷாலின் ‘இரும்புத்திரை’ ஷூட்டிங் ஓவர்

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2017 (13:29 IST)
விஷால் நடித்துவந்த ‘இரும்புத்திரை’ படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்துவந்த படம் ‘இரும்புத்திரை’. இந்தப் படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிக்க, அர்ஜுன் வில்லனாக நடித்துள்ளார். மேலும், ரோபோ சங்கர், வின்செண்ட் அசோகன், டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய  வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
 
விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ஜார்ஜ் சி வில்லியம் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட் செய்கிறார். இந்தப் படத்தின் டீஸர் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இசை வெளியீட்டு விழா ஜனவரி 6ஆம் தேதி மலேசியாவில் நடைபெற இருக்கிறது.
 
சென்னையில் நடைபெற்றுவந்த இந்தப் படத்தின் ஷூட்டிங், பாடல் காட்சியுடன் நேற்று நிறைவடைந்துள்ளது. ஜனவரி 26ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்