கோலி சோடா 2 சிங்கிள் டிராக்கை வெளியிடும் விஷால்

Webdunia
வியாழன், 26 ஏப்ரல் 2018 (13:01 IST)
விஜய் மில்டன் இயக்கி வரும் கோலிசோடா 2 படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக்கை வெளியிட இருக்கிறார் நடிகர் விஷால்.

 
 
விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கோலி சோடா 2’. ஏற்கெனவே வெளியாகி வெற்றிபெற்ற ‘கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது. ஆனால், முதல் பாகத்தில் நடித்தவர்களைப் பயன்படுத்தாமல், புதுமுகங்களை வைத்து இந்தப் படத்தை எடுத்து வருகிறார் விஜய்  மில்டன்.
 
சமுத்திரகனி, செம்பன் ஜோஸ், பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, கிருஷ்ணா, ரக்‌ஷிதா, ரோகிணி, ரேகா, சரவண சுப்பையா, ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை, விஜய் மில்டனின் ரஃப் நோட் தயாரித்திருக்கிறது. 
 
இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பொண்டாட்டி என்ற சிங்கிள் டிராக் ஏற்கனவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக்கை நடிகர் விஷால் வெளியிட இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்