ஓடிடியில் ரிலிஸ் ஆகும் விஷால் படம் – ஆனால் ஒரே ஒரு சிக்கல்!

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (17:15 IST)
விஷால் நடித்துள்ள சக்ரா திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

விஷால் நடிப்பில் இயக்குனர் எம்எஸ் ஆனந்தன் இயக்கி வரும் ’சக்ரா’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து தற்போது லாக்டவுன் நேரத்தில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ’சக்ரா’ படத்தின் டிரைலர் துளிகள் கடந்த 22ம் தேதி திங்கட்கிழமை வெளியாகி ரசிகர்களை வரவேற்பை பெற்றதோடு, டிரைலருக்கு நல்ல எதிர்பார்ப்பும் கிடைத்தது.

இந்நிலையில் இப்போதைக்கு திரையரங்குகள் திறக்க வாய்ப்புகள் இல்லை என்பதால் இந்த படத்தை ஓடிடியில் ரிலிஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தினார் விஷால். அதில் ஒரு பெரிய தொகைக்கு ஒப்பந்தம் முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஓடிடியில் ரிலீஸ் செய்வதில் ஒரு சிக்கல் உள்ளதாம். இன்னும் 3 நாட்கள் படப்பிடிப்பு முடிந்தால்தான் படம் முழுமையடையும் என சொல்லப்படுகிறது.

அதனால் ஷூட்டிங் நடத்த தமிழக அரசு அனுமதித்த பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி ரிலிஸ் செய்ய திட்டமிட்டாராம் விஷால்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்