மாஸ்டர் டிரைலர் அதிக டிஸ்லைக் வாங்கி சாதனைப் படைக்கும்! மீரா மிதுன் சர்ச்சை டிவிட்!

வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (17:04 IST)
பாலிவுட் பிரபல நடிகை ஆலியாபட் நடித்த ’சதக் 2’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

இந்த டிரைலருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்று ஆலியாபட் உள்பட படக்குழுவினர் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர் ஆனால் இந்த ட்ரெய்லர் வெளியான ஒரு நாளுக்கு 67 லட்சம் டிஸ்லைக்குகளைப் பெற்றுள்ளது. கடந்த சில நாட்களாக சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஆலியாபட் கூறியதும் நெப்போட்டிஸம் சர்ச்சையில் சிக்கியதும் தான் இந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது .

இந்நிலையில் இந்த ஸ்க்ரீன்ஷாட்டைப் பகிர்ந்த மீரா ’மிதுன் வாரிசு அரசியலுக்கு எதிராக சரியான வேலை. விரைவில் விஜய் மற்றும் சூர்யா படங்களின் டிரைலர்கள் வெளியாகி இதுபோல டிஸ்லைக்குகள் பெறும்’ எனக் கூறியுள்ளார். கடந்த சில வாரங்களாக நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவுக்கு எதிராக கருத்துகளை மீரா மிதுன் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்