நான்கு நாளில் இவ்வளவுதான் வசூலா?... விஷாலின் லத்தி திரைப்படத்தைக் காப்பாற்றிய சேட்டிலைட் தொகை!

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (15:07 IST)
விஷால் நடித்த லத்தி திரைப்படம் டிசம்பர் 22 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ஆனால் பெரியளவில் நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்றது.

விஷால் நடித்த ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் இந்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியான நிலையில் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதையடுத்து விஷாலின் அடுத்த படமாக லத்தி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளிக் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் முதல்நாளில் தமிழகத்தில் இந்த படம் வெறும் 2 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கடுத்த மூன்று நாட்களில் மொத்தமாக 1.5 கோடி ரூபாய் வசூல் செய்து மொத்தமாக 3.5 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமை மட்டும் சுமார் 24 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாம். இந்த தொகைதான் இப்போது லத்தி படத்தின் படுதோல்வியை பெரியளவில் காப்பாற்றியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்