ரிலீஸை நெருங்கும் லத்தி… வெளியான சென்சார் தகவல்!

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (08:27 IST)
விஷால் நடித்த ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் இந்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியான நிலையில் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதையடுத்து விஷாலின் அடுத்த படமாக லத்தி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் படத்தில் இருந்து ஒரு துணுக்குக் காட்சியைப் படக்குழு வெளியிட்டது. அதன் பின்னர் சென்னையில் படத்தின் டீசர் ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இந்த படத்தை விஷாலின் நண்பர்களான ராணா மற்றும் நந்தா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த தேதியில் ரிலீஸாகவில்லை. இதை யடுத்து கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் இப்போது படம் சென்ஸார் ஆகியுள்ளது. படத்துக்கு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. லத்தி திரைப்படத்தில் விஷால் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்