சின்மயி சர்ச்சை: கோபமான விஷால்

Webdunia
ஞாயிறு, 14 அக்டோபர் 2018 (12:01 IST)
பிரபல பின்னணி பாடகி சின்மயி ட்விட்டரில் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி  தமிழ் திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்தார்.
 
இந்நிலையில் இது பற்றி நடிகர் விஷால் கருத்து கூறும் போது,  சின்மயி விவகாரத்தில் அவர் உடனடியாக சொல்லி இருக்க வேண்டும் என கோபமாக  பேசினார்.
 
பிரச்சனைகளை விரைவாக வெளியே சொல்லுங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அமலாபால் அப்படி உடனே சொன்னதால்தான் எங்களால் உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டு அவருக்கு நியாயம் கிடைத்தது  என்றார்.
 
இந்த பிரச்சனைக்காக அனைத்து சினிமா சங்கங்களிலும் 3 பேர் கொண்ட கமிட்டி உருவாக்கப்பட்டு வருவதாகவும் விஷால் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்