‘பில்லா பாண்டி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சூரி, விவேக், கருணாஸ், சீமான், தயாரிப்பாளர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
இவ்விழாவில் கருணாஸ் நடிகர் அஜித் குறித்து பேசியதாவது: "அஜீத் பற்றி ஒன்று சொல்கிறேன். ஒருமுறை ஒரு சினிமா நிகழ்ச்சி நடந்தது. அதில் மேடையில் பேசும்போது அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி முன்னிலையில் “எங்களுக்கு இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவதற்கு விருப்பம் இல்லை. அரசியல்வாதிகள் வற்புறுத்துகிறார்கள்” என்று நேருக்கு நேராக சொன்னார். அவர் பேசும்போது ஒவ்வொருவராக யோசித்து யோசித்து கை தட்டினார்கள். ஆனால் அவர் பேசும்போதே எழுந்து கை தட்டியவன் இந்த கருணாஸ் மட்டும்தான்." என்றார்.