HBD விஷால்: குவியும் வாழ்த்துக்கள்

Webdunia
ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (06:45 IST)
பிரபல நடிகர் விஷால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
பிரபல தயாரிப்பாளர் ஜிகே ரெட்டி அவர்களின் மகனான விஷால் செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவருடைய அடுத்த படமான சண்டைக்கோழி என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு படிப்படியாக திரைப்படங்கள் குவிந்தது. திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, அவன் இவன், பாண்டிய நாடு, பாயும்புலி உள்பட பல திரைப்படங்களில் விஷால் நடித்தார். தற்போது அவர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் எனிமி, மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் 2, மற்றும் து.பாசரவணன் இயக்கத்தில் ஒரு படம் என மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் விஷால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் அவருக்கு ரசிகர்கள் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
நடிகர் விஷால் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் அப்போது அவர் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்