விஜய்சேதுபதியின் படம் முடக்கம்..இயக்குநர் வேண்டுகோள்!

சனி, 28 ஆகஸ்ட் 2021 (23:10 IST)
விஜய்சேதுபதியின் படம் முடங்கியுள்ள நிலையில் இப்படத்தைத் திரைக்குக் கொண்டுவர வேண்டுமென சீனு ராமசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விஜய் சேதுபதி மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் நடிப்பில் உருவாகி பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் இடம் பொருள் ஏவல் திரைப்படம் இப்போது ஓடிடியில் ரிலிஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சீனு ராமசாமி இயக்கியப் படம் இடம் பொருள் ஏவல். இப்படத்திற்காக முதல் முறையாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் வைரமுத்துவும் இணைந்தனர். படத்தின் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் ரிலீஸுக்கு தயாராகும் போது படத்தைத் தயாரித்த இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பொருளாதாரப் பிரச்சனையில் சிக்க படம் ரிலீஸாவதில் தாமதமாகிக் கொண்டே வந்தது. லிங்குசாமி தயாரித்த உத்தமவில்லன் மற்றும் அஞ்சான் படங்களின் தோல்வியால் மீள முடியாத கடனில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த படம் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கிறது.

இந்நிலையில் இப்போது அந்த திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடந்து வருவதாகத் தகவல் வெளியானத்.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு இயக்குநர் சீனுராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில், ஈரோஸ் இன்டர்நேஷனல் என்ற பெருநிறுவனம் கொஞ்சம் அன்பு வைத்தால் இடம் பொருள் ஏவல் திரைப்படம் வெளிவரும்.

படைப்பும் அதன் மீதான உழைப்பும் உயிர் பெறும். ஒப்பந்தங்களும்நிறைவேற்றம் பெறும். உடல் தீப்பந்தம் தாங்கும் வரை இந்த உதவியை மறவேன். @ErosNowSouth வாழ்க. @dirlingusamy எனத் தெரிவித்துள்ளார்.  

ஈரோஸ் இன்டர்நேஷனல் என்ற பெருநிறுவனம் கொஞ்சம் அன்பு வைத்தால் இடம் பொருள் ஏவல் திரைப்படம் வெளிவரும்.

படைப்பும் அதன் மீதான உழைப்பும் உயிர் பெறும்.

ஒப்பந்தங்களும்
நிறைவேற்றம் பெறும்.

உடல் தீப்பந்தம் தாங்கும் வரை இந்த உதவியை மறவேன்.@ErosNowSouth வாழ்க.@dirlingusamy

— R.Seenu Ramasamy (@seenuramasamy) August 28, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்