சில ஆண்டுகளுக்கு முன்னர் கோலி என்னைத் தெரியாது என்றார்… ஆனால் இப்போ? – சிம்பு பகிர்ந்த தகவல்!

vinoth

சனி, 24 மே 2025 (09:12 IST)
சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘பத்து தல’ . அந்த படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதன் பின்னர் அவர் கமல்ஹாசனோடு இணைந்து மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கவுள்ள மூன்று படங்களின் அறிவிப்புகள் வெளியாகின. சிம்பு – ராம்குமார் பாலகிருஷ்னன் இயக்கத்தில் உருவாகும் அவரது 49 ஆவது படம் முதலில் தொடங்கவுள்ளது.

அடுத்தடுத்து திறமையான இளம் இயக்குனர்களோடு சிம்பு கைகோர்ப்பதால் அவரின் சினிமா வாழ்க்கை அடுத்த தளத்துக்கு செல்லுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சிம்பு சமீபகாலமாக தரும் நேர்காணல்களிலும் முதிர்ச்சியாகப் பேசி வருகிறார்.

அப்படி ஒரு நேர்காணலில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கோலிக்கும் தனக்கும் இடையே நடந்த சந்திப்பு குறித்து பேசியுள்ளார். அதில் “சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் விராட் கோலியை சந்தித்துப் பேசினேன். அப்போது அவர் என்னைத் தெரியாது என்றார். அப்போது ஒரு நாள் என்னை உங்களுக்குத் தெரியவரும் என்று நினைத்துக் கொண்டேன். சில நாட்களுக்கு முன்னர் கோலி ஒரு நிகழ்ச்சியில் அவருக்கு மிகவும் பிடித்த பாடல் ‘நீ சிங்கம்தான்’ (சிம்பு நடித்த பத்து தல படத்தின் பாடல்) என்று சொல்லியிருந்தார். இது கூட ஒருவகையில் வெற்றிதான்” எனப் பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்