நாயகனை விட தக் லைஃப் சிறப்பாக வரவேண்டும் என ஆசைப்பட்டோம்… வந்திருக்கிறதா?- கமல் கொடுத்த அப்டேட்!

vinoth

சனி, 24 மே 2025 (08:57 IST)
நாயகன் என்ற கல்ட் கிளாசிக் படத்தைக் கொடுத்த கமல்ஹாசன் –மணிரத்னம் கூட்டணி 35 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் ஜூன் மாதம் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதற்கிடையில் படத்தின் டிரைலர் ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளது.

இந்த படத்துக்கான ப்ரமோஷன் பணிகளில் கமல்ஹாசன் தற்போது ஈடுபட்டு வருகிறார். அப்படி ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசும்போது “தக் லைஃப் படம் பற்றி அறிவிக்கப்பட்ட போது அது ‘நாயகன்’ படத்தை விட சிறப்பாக வரவேண்டும் என நாங்கள் நினைத்தோம். படத்தை இப்போது பார்த்துவிட்ட நிலையில் அது நடந்திருப்பதாக நான் நினைக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்