ரிலீஸ் வேலைகளைத் தொடங்கிய ‘வீர தீர சூரன்’ படக்குழு… டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth

திங்கள், 17 மார்ச் 2025 (15:38 IST)
விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டு தங்கலான் திரைப்படம் நல்ல கவனத்தைப் பெற்றது. அதையடுத்து இப்போது சித்தா படத்தின் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் உருவாகும் ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மற்ற முக்கிய வேடங்களில் எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் துஷாரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்ததை அடுத்து தற்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வெளியாகும் எனவும் பின்னர் முதல் பாகம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து  வருகின்றன. படம் மார்ச் 27 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் நாட்கள் நெருங்கிவிட்ட போதும் படத்துக்கான ப்ரமோஷன் பணிகள் தொடங்காமல் இருந்தன. இந்நிலையில் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வரும் 20 ஆம் தேதி நடக்கவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதனால் அறிவிக்கப்பட்ட தேதியில் படம் ரிலீஸாகிவிடும் என்பது உறுதியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்