செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம் என்ன ஆகிய படங்களில் ஜிவி பிரகாஷ் இசையமைத்த நிலையில், செல்வராகவன் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன், கடந்த சில ஆண்டுகளாக நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் நிலையில், ஒரு படத்தை இயக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், செல்வராகவன் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பு நாளை மாலை 6:30 மணிக்கு அறிவிக்கப்படும் என புதிய போஸ்டர் உடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
இந்த தகவலை ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். "திறமையான இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் இசையமைக்க இருப்பதை அறிவித்துக் கொள்கிறேன். ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம் என்ன ஆகிய படங்களை அடுத்து மூன்றாவது முறையாக நாங்கள் இணைகிறோம்" என்று தெரிவித்துள்ளார். இந்த படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.