எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம்பிரபு, மஞ்சிமா மோகன் நடித்துள்ள படம் ‘சத்ரியன்’. இரண்டாவது ஹீரோவாக ‘வேட்டையன்’ கவினும், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா தத்தாவும் நடித்துள்ளனர். வருகிற வெள்ளிக்கிழமை இந்தப் படம் ரிலீஸாகிறது. இந்தப் படத்தில் ரவுடியாக நடித்துள்ளாராம் விக்ரம்பிரபு.
இரண்டு ரவுடி கும்பல் திருச்சியையே ஆட்டிப் படைக்கிறது. அதில் ஒரு கும்பலின் தலைவன் இறந்துவிட, அந்த கும்பலுக்குத் தலைவனாகிறார் விக்ரம்பிரபு. எதிர்த்தரப்பு அவருக்கு கொடுக்கும் குடைச்சல்களை எல்லாம் சந்தித்து, காதலியை எப்படி கரம்பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதையாம்.