மஹாவீர் கர்ணா படம் தாமதம் – அடுத்த படத்துக்கு சென்ற விக்ரம் !

Webdunia
வியாழன், 20 ஜூன் 2019 (14:22 IST)
விக்ரம் நடிப்பில் உருவாக இருந்த மஹாவீர் கர்ணா படத்தின் படப்பிடிப்பு தாமதமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விக்ரம், கமல் தயாரிக்கும் கடாரம் கொண்டான் படத்தின் படப்பிடிப்புப் பணிகளை முடித்துவிட்டு இப்போது ஆர்.எஸ்.விமல் இயக்கும் மஹாவீர் கர்ணா படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். 300 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாகவும் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. விறுவிறுப்பாகத் தொடங்கிய முதல்கட்ட படப்பிடிப்பை அடுத்து இப்போது படப்பிடிப்பு இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் விக்ரம் இப்போது அஜய் ஞானமுத்து இயக்கும் அடுத்த படத்தின் பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். கர்ணா படத்தின் தாமதம் குறித்து தெரிவித்துள்ள படக்குழு ‘கரணா படம் கொஞ்சம் தாமதமாகியுள்ளது. படப்பிடிப்புத் தொடங்கினால் இடைநிற்றல் இல்லாமல் படத்தை முடிக்க வேண்டும் என விக்ரம் கூறியுள்ளார். அதனால் படப்பிடிப்பு குறித்து விரிவான தகவல்களை விக்ரமிடம் ஒப்படைக்க இருக்கிறார் இயக்குனர் விமல். அதன் பின்னர் படப்பிடிப்பு தொடங்கும்’ எனத் தெரிவித்துள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்