அமேசான் ஓடிடியில் விக்ரமின் அடுத்த படம்!

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (19:32 IST)
அமேசான் ஓடிடியில் விக்ரம் நடிக்கும் அடுத்த திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஏற்கனவே சூர்யா, தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் விக்ரம் நடித்து முடித்துள்ள மகான் என்ற திரைப்படமும் அமேசான் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது
 
இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டதாகவும் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடித்த இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார் என்பதும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் முன்னணி நடிகர்களின் படங்கள் தொடர்ச்சியாக ஓடிடியில் வெளியாகி வருவது திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்