மாறன் படம் ஓடிடிக்கு சென்றது ஏன்? அதிர்ச்சி அளிக்கும் தகவல்!

வியாழன், 28 அக்டோபர் 2021 (17:15 IST)
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் தலைப்பிடாதப்படம் D43. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார், சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்துக்கு மாறன் என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் இப்போது இந்த படத்தை பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது.  வரும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தனுஷின் மாறன் படம் ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என தகவல்கள் பரவி வருகின்றன.

இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் கிட்டத்தட்ட உண்மைதான் என்று சொல்லப்படுகிறது. திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஏன் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற சந்தேகம் திரையுலகினர் மத்தியிலேயே எழுந்துள்ளது. அதற்கு முக்கியக் காரணம் படம் தனுஷுக்கே திருப்தி அளிக்கும் விதமாக இல்லையாம். அதனால்தான் அவர் தயாரிப்பாளர்களின் முடிவில் தலையிடவில்லை என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்