அஜித் இடத்திற்கு செல்கிறார் சீயான் விக்ரம்

Webdunia
புதன், 7 ஜூன் 2017 (06:00 IST)
தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாகிய பல்கேரியாவில் நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் சீயான் விக்ரம் நடித்து வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பும் பல்கேரியாவில் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.



 


விக்ரம் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி வரும் துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இந்த படத்தின் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் பல்கேரியா செல்லவுள்ளனர். இந்த பாடலுக்கு விக்ரம் வித்தியாசமான கெட்டப்புக்கு மாறவுள்ளார்.

விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். கவுதம் மேனனின் ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
அடுத்த கட்டுரையில்