பிரம்மாண்ட படத்தில் இருந்து விலகினாரா விக்ரம்! இதுதான் காரணமாம்!

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (10:01 IST)
விக்ரம் நடிப்பில் மலையாளத்தில் உருவாக இருந்த மகாவீர் கர்ணா படத்தில் இருந்து அவர் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

விக்ரம், மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்கும் மஹாவீர் கர்ணா படத்தில் நடிக்க சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தமானார். 300 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாகவும் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. விறுவிறுப்பாகத் தொடங்கிய முதல்கட்ட படப்பிடிப்பை அடுத்து இப்போது படப்பிடிப்பு இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் விக்ரம் தனது கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடிக்க முடிவெடுத்து அந்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் இன்னமும் அந்த படம் தொடங்குவதற்கான எந்த அறிவிப்புகளும் வெளியாகாத நிலையில் அந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாக விக்ரம் அறிவித்துவிட்டாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்