ஏழு நாட்களில் ரஜினி சாதனையை சமன் செய்த கமல்? – விக்ரம் பத்தல பத்தல வசூல்!

Webdunia
சனி, 11 ஜூன் 2022 (13:28 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து கடந்த வாரம் வெளியான விக்ரம் படம் வசூலில் ரஜினியின் 2.0வை நெருங்கியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபது மற்றும் பகத் பாசில் ஆகியோர் நடித்த படம் விக்ரம்.

பேன் இந்தியா படமாக கடந்த 3ம் தேதி வெளியான இந்த படம் அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக நல்ல வரவேற்புடன் வசூலை குவித்துள்ளது. படம் வெளியாகி முதல் மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் 100 கோடி வசூலை தாண்டியது.

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி படம் வெளியாகி 7 நாட்கள் ஆன நிலையில் உலக அளவில் மொத்தமாக இதுவரை ரூ.260 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வார இறுதி நாட்களுக்கு பிறகு வசூல் மேலும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7 நாட்களில் வேகமாக ரூ.260 கோடி வசூல் செய்துள்ளதன் மூலம் தமிழில் வெளியாகி வேகமாக வசூல் செய்த படங்களில் ரஜினிகாந்தின் 2.0 படத்திற்கு பிறகு விக்ரம் அந்த சாதனையை செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்