விஜய்யின் 'லியோ' பட டிக்கெட்கள் அதிகம் விற்பனை

வியாழன், 5 அக்டோபர் 2023 (16:23 IST)
விஜய்யின் 'லியோ' பட படத்தின் டிக்கெட் பற்றிய  தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  உருவாகியுள்ள படம் லியோ.

இப்படத்தை  லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். 

இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி நடக்க இருந்த நிலையில் திடீரென்று ரத்து  செய்யப்பட்ட நிலையில், சமீபத்தில் செகண்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகி கவனம் பெற்றது.

இந்நிலையில் லியோ படத்திற்கு   நேற்று சென்சார் சான்றிதழ் வழங்கினர். அதன்படி, இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், லியோ பட டிரைலர் அறிவித்திருந்தபடி  இன்று மாலை ட சன் டிவியின் யூடியூப் சேனலில் ரிலீஸாக உள்ளது.

வாரிசு படத்திற்கு பின் விஜய்யின் லியோ படத்தின் டிக்கெட் முன்பதிவு இங்கிலாந்தில் 40 ஆயிரம் டிக்கெட் விற்று தீர்ந்துள்ளதாகவும்,  இப்படத்தை வெளியிடும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்