ஒருவழியா ட்ரெய்லருக்கு முன்னாடியாவது போஸ்டர் வந்துச்சே! – லியோ படத்தில் த்ரிஷாவின் போஸ்டர் வைரல்!

வியாழன், 5 அக்டோபர் 2023 (11:57 IST)
இன்று லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ள நிலையில் த்ரிஷாவின் போஸ்டர் வெளியாகியுள்ளது.



ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் ஒரு படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் என பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஆடியோ லாஞ்ச் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல்வேறு சிக்கல்கள் காரணமாக ஆடியோ நிகழ்ச்சி நடைபெறவில்லை. எனினும் அக்டோபர் 5 மாலை பட ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது ரசிகர்களுக்கு மன ஆறுதலாக அமைந்தது.

லியோ பட அப்டேட்டுகள் வெளியாக தொடங்கியதிலிருந்தே விஜய், அர்ஜுன், சஞ்சய் தத் என பலரது கேரக்டர் போஸ்டர்களும் வெளியாகி வந்தாலும் நடிகைகள் யாருடைய போஸ்டரும் வெளியாகமலே இருந்து வந்தது. அந்த குறையை போக்கும் விதமாக தற்போது த்ரிஷாவின் கேரக்டர் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்