விஜய்யின் குட்டி ரசிகை அசத்தல் நடிப்பு - பிரமித்துப்போன பிரபலங்கள்

Webdunia
சனி, 17 நவம்பர் 2018 (14:53 IST)
தளபதி விஜய்க்கு பெரியவர்கள், இளைஞர்கள் மட்டும் இல்லாது சின்ன குழந்தைகளையும் தன் நடிப்பால் கவர்ந்திருப்பது ஒரு சிறப்பு.
 
இதுவரை விஜய்யை பிடித்த குழந்தைகள் நிகழ்ச்சிகளில் அவரை போல் செய்து காட்டுவதை பார்த்திருப்போம். ஆனால் பிரபல தொலைக்காட்சியில் கிங்ஸ் ஆஃப் காமெடி  என்ற நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் கீர்த்தனா என்ற குழந்தை அச்சு அசல் விஜய்யை போலவே பேசி நடித்திருப்பது பலரையும் ஈர்த்துள்ளது.
 
அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ஜெயம் ரவி அந்த குழந்தையின் நடிப்பை பார்த்து பிரம்மித்து போனார். 
 
தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. அதை பார்த்த பிரபலங்கள். விஜய்க்கு இப்படி ஒரு விஜய் ரசிகையா என்று வியந்துள்ளனர். மேலும் ரசிகர்களும் அந்த குட்டி குழந்தையின் வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்